இப்பொழுதே சொல்!

November 30th, 2006

உன்னில் இன்னும் நிலவும்
ஆதிக்கத்தை நான் அறிவேன் !
என்னில் புதைந்து கிடக்கிறாய் நீ !
போதை வஸ்துவில் மூழ்கிப் போன
ஒரு மூளையின் சடலமாய்,
என் சகல உறுப்புக்களலான
உன் மீதான எனது அராஜகம்தான்
எனது கம்பீரம் எனும் உணர்வை
என் வேருக்குக் கர்வம் தருகின்றது.

நீ சிதையத்தான் வேண்டும் !
நீ சிதையத்தான் வேண்டும் !

என் ஆத்மாவின் நாவில் சுரக்கும்
தாக வெறிக்கான சகல நிவாரணி
உன் சிதைவுகள்,

நீ என்னை வக்கிரத்தின் பிரதிநிதி எனச் சொல்லலாம்

நீ என்னை சதை வெறியின் சங்கீதமெனச் சொல்லலாம்
எனக்கு என் தணிப்பின் மீது மட்டுமே ஆர்வம்.

என் சரீரத்தின் உன் சுவாசம் கூட உயிர்ப்புடன் இல்லை.

என்பது புரியும் எனக்கு.

எந்தவொரு தடுப்புச்சுவராலும்

தடுக்கமுடியா இந்த உணர்ச்சிப் போரில்
இறுதி வெற்றி
என் பக்கம் என்பது உனக்கு மறக்க முடியாத
ஒரு கால பாடமாய் இருக்கிறது இல்லையா ?

நீ வீரத்தால் பிதுங்கி நிற்பதுபோலான
ஒரு மாய வலையை என்மீது வீசிய
வரலாற்றின் ஆதிக்கக் கரங்கள்
என்னை பிளந்து விட்டன.
அந்தப் பிளவில் நிகழப் போகும்
உன் வீரிய வீழ்ச்சியின்

வருகையை அறியாமல்

இப்பொழுது சொல்,
யாரை யார் ஆள்கிறார்கள் ?

யாரை யார் சுரண்டுகிறார்கள் ?
யாரில் யார் வீழ்கிறார்கள் ?
இப்பொழுதே சொல்!

தாமரை1998க்கு நன்றி!

இக்கவிதையை எனக்குத் தெரியாத நிலையில்(யூனிக்கோட் வாழ்க!!!)
என் மீது அபிமானம்
கொண்டு இக்கவிதை வெளியிட்ட எக்ஸில் உயிருக்கு நன்றி!
http://www.exilivre.com/poesie.php?page=5 

பெண்ணிய எழுத்து ஈடுபாடு உள்ளவர்கள் இக்கவிதையைப் பற்றி

தங்கள் கருத்துக்களை சொல்லவேண்டும் 

 

வலைப் பதிவு உலகம்

November 29th, 2006

எங்கும் வலைப் பதிவு மயம்